29 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் அமீர் கான்?
Share
ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் “கூலி.” சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி நேற்று ஜெய்பூர் சென்றார். இதை தொடர்ந்து இந்தி நடிகரான அமீர் கானும் நேற்று ஜெய்பூர் விமான நிலையத்தில் காணப்பட்டார். இவர்களின் புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. கூலி திரைப்படத்தில் அமீர் கான் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கிளம்பியுள்ளது. இதற்கு முன் திலிப் ஷங்கர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆதங் ஹி ஆதங் என்ற திரைப்படத்தில் ரஜினி மற்றும் அமீர் கான் இணைந்து நடித்தனர். பரவி வரும் செய்தி உண்மையெனில் இவர்கள் இருவரும் 29 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஏதேனும் புதிய காணொளி வெளியிடுவர் என எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.