LOADING

Type to search

சினிமா

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘அலங்கு’ படக்குழு

Share

‘அலங்கு’ படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். சங்கமித்ரா அன்புமணி சினிமாத்துறையில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

அலங்கு திரைப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படம், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பற்றியும், தமிழக – கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டும் ஆக்சன் – திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. அலங்கு, என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தைச் சார்ந்ததாம். இந்த நாய் ராஜராஜ சோழனின் படையில் போர் நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் நினைவூட்டலுக்கும் இந்தப் பெயர் மிகவும் பொருந்தியிருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். இந்த நிலையில், அலங்கு படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.