LOADING

Type to search

சினிமா

மோகன்லாலின் சிறப்பு பதாகையை கண்ணப்பா படக்குழு வெளியீடு

Share

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ‘கண்ணப்பா’ எனும் தெலுங்கு படம் உருவாகி வருகிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மது ,சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷணா, பிரம்மானந்தம், மோகன் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுமட்டும்மல்லாமல் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் மோகன்லால் கதாப்பாத்திரத்தில் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மோகன்லால் இப்படத்தில் கிராடா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இம்மாதிரியான ஒரு அசாதாரண நடிகருடன் நடிப்படதற்கு பெருமை கொள்கிறேன் என படத்தின் கதாநாயகனான விஷ்ணு மஞ்சு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.