ஆஸ்கர் விருதிற்கு சூர்யாவின் ‘கங்குவா’ படம் பரிந்துரை
Share
2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தகுதியுடைய படங்களின் பட்டியலில் கங்குவா இடம்பிடித்துள்ளது. 97வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற போட்டியிட தகுதியுள்ள திரைப்படங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் 323 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 207 திரைப்படங்கள் ஏற்கனவே சிறந்த திரைப்படம் பிரிவில் இடம்பெற தகுதி பெற்றுவிட்டன. இதில் ஐந்து இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கங்குவா, ஆடு ஜீவிதம் – தி கோட் லைப், சந்தோஷ், ஸ்வாதந்த்ரியா வீர் சாவர்கர் மற்றும் ஆல் வி இமாஜின் அஸ் லைட் ஆகியவை அடங்கும். இந்த திரைப்படங்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறும். இதன்பிறகு, 17 ம் தேதி இறுதிப் பட்டியலில் தேர்வான திரைப்படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.