LOADING

Type to search

சினிமா

‘தளபதி 69’- படத்தில் நடிகர் அருணாசலம்

Share

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளநிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் டீஜே அருணாசலம் இப்படத்தில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விஜய் சாருடன் பணிபுரிய வேண்டும் என்பது எனது கனவு, அது தற்போது நிறைவேறி இருக்கிறது. எப்போதும் பிடித்த தளபதியுடன் ‘தளபதி 69′ படத்தில் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.