LOADING

Type to search

சினிமா

கிங்ஸ்டன் படத்தின் ராசா ராசா பாடல் வெளியீடு

Share

ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் – திவ்யா பாரதி நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா ராசா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை யுகபாரதி எழுத ஜிவி பிரகாஷ் மற்றும் சுபலாஷினி இணைந்து பாடியுள்ளனர்.