LOADING

Type to search

இந்திய அரசியல்

ராமநாதபுரத்தில் அதிக விளையாட்டு வீரர்கள் உருவாகுகிறது – துணை முதல்-அமைச்சர் உதயநிதி

Share

ராமநாதபுரம் அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கும் கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கபடி வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் கபடி விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கபடி வீரர்களுக்கு காப்பீடு மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராமநாதபுரம் அதிகமான விளையாட்டு வீரர்களை கொண்ட மாவட்டம், அதிகப்படியான கபடி வீரர்களை உருவாக்கும் மாவட்டம் ஆகும். ராமநாதபுரம் அதிக விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறது. மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம் முன்னோடியான மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.