LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – சீனா கடும் கண்டனம்

Share

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக கனடாவும் 25 சதவிகித வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ளது. அதேபோல மெக்சிகோவும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில், சீனா இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், “அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது. அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும்” என்றார்.