LOADING

Type to search

உலக அரசியல்

பாரிஸ் அருகே முதியோர் காப்பகத்தில் தீ விபத்து- 3 பேர் பலி

Share

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள பவுபேமாண்ட் நகரில் முதியோர் காப்பகம் செயல்படுகிறது. நேற்று இந்த காப்பகத்தில் உள்ள சலவை அறையில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. தீப்பற்றிய மூன்றாவது தளம் முழுவதும் புகை மண்டலமானது. இதனால் காப்பகத்தில் இருந்து முதியவர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலர் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வெளியேற முடியாமல் சிலர் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.