LOADING

Type to search

இந்திய அரசியல்

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் – 7 பேர் சுட்டுக்கொலை

Share

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த 4-5-ந்தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டார் பகுதியில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தின் சிறப்புக்குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எல்லை வழியாக ஊடுருவ முயற்சிப்பதை கண்டறிந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது இந்திய ராணுவத்தினருக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. இதில் ஏழு ஊடுருவலர்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஏழு பேர்களில் 2 முதல் 3 பேர் பாகிஸ்தான் எல்லை ஆக்சன் குழுவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.