LOADING

Type to search

சினிமா

“விடாமுயற்சி” படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டு

Share

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று திரையில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘விடாமுயற்சி’ படத்தை புகழ்ந்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விடாமுயற்சி என்ன மாதிரியான ஒரு தீவிரமான திரில்லர் படம். புதிர் கணக்குகளை விடையளிப்பதுபோல முதல் காட்சியில் இருந்து கடைசிவரை நம்மை தூண்டில் போட்டி இழுக்கிறது. அஜித்குமாரின் நடிப்பு, அவரது மென்மை வாய்ந்த நடிப்பினால் தனியாளாக படத்தினை தனது தோளில் சுமக்கிறார். எதார்த்தமான ஆக்ஷன் திரைப்படத்தில் கடைசியாக வரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளார். .பின்னணி இசையின் அனிருத் எப்போதும் மினுமினுக்கும் இசையை தருகிறார். அதனால் ஒவ்வொரு முறையும் அவரை வாழ்த்தாமல் இருக்க முடிவதில்லை. மகிழ் திருமேனி திரைக்கதையை இறுக்கமாக வைத்திருந்தார். காட்சிகளை அமைத்திருந்த விதமும் அந்த மாதிரியான இடங்களில் ஒரு தொடர்ச்சியை கொண்டுவருவது அவரது கடினை உழைப்பைக் காட்டுகிறது. நிரவ், ஓம்பிரகாஷ் அவர்கள் படத்தினை உலகத் தரத்தில் காட்டியுள்ளார்கள். திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். லைகாவின் மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.