பிரேம்ஜி நடிக்கும் “வல்லமை” படத்தின் முன்னோட்ட பதிவேற்றம்
Share

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார். “வல்லமை” படத்தின் முதல்காட்சி பதாகை வெளியாகி வைரலானது. வல்லமை படத்தின் முன்னோட்டத்தை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, சீனு ராமசாமி ஆகி்யோர் இணைந்து வெளியிட உள்ளனர். கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி நடிக்கும் “வல்லமை” படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.