LOADING

Type to search

உலக அரசியல்

பிலிப்பைன்ஸ்: சுறா தாக்கி ரஷிய சுற்றுலா பயணி உயிரிழப்பு

Share

பிலிப்பைன்ஸ் படங்காஸ் மாகாணத்தில் லுசோன் தீவு அமைந்துள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து செல்வர். அந்தவகையில் ரஷிய சுற்றுலா பயணிகள் 4 பேர் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் படகில் சென்று அங்குள்ள கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை அவர்களை அடித்துச்சென்றது. இதில் இருவர் படகு மூலம் பத்திரமாக கரை திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். அதே சமயம் மற்றொரு நபரை சுறா மீன் தாக்கி இழுத்துச் சென்றது. தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அந்த நபரும் சடலமாக மீட்கப்பட்டார்.