‘சுழல் 2 ஓர் கனவுப் பயணம் ‘- மஞ்சிமா மோகன் நெகிழ்ச்சி
Share

2015-ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அடுத்த ஆண்டே ‘அச்சம் என்பது மடமையடா ‘ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இதைத்தொடர்ந்து தமிழில், சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சுழல் வெப் தொடரின் 2-ம் பாகத்தில் நடித்திருக்கிறார்..
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த தொடர் கடந்த 28-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இதில் நடித்தது குறித்து நடிகை மஞ்சுமா மோகன் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சுழல் 2 ஓர் கனவுப் பயணம். இந்த கதாபாத்திரம் எப்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.