LOADING

Type to search

இந்திய அரசியல்

சென்னை வளசரவாக்கத்தில் பெண் மருத்துவருக்கு கத்திக்குத்து

Share

சென்னை வளசரவாக்கத்தில் பெண் மருத்துவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி பெண் மருத்துவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர். இந்நிலையில், பெண் மருத்துவரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராமாபுரம் பகுதியை சேர்ந்த நாகமுகத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.