திபெத்தில் அடுத்தடுத்து 4-வது முறையாக நிலநடுக்கம்
Share

திபெத்தில் நேற்று நள்ளிரவு 12.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என சந்தேகிக்கப்படுகிறது. திபெத்தில் கடந்த வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 3.5 முதல் 4.3 வரையிலான 3 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதுபோன்று பூமியின் மேற்பரப்பு பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம் அதிக ஆற்றலுடன் நிலப்பகுதிகளை தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், கட்டிடங்களுக்கும் மக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகம். திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் யுரேசியன் தட்டு பகுதியில் அமைந்துள்ளன. இதனால், சீராக நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட கூடிய பகுதிகளாக அவை உள்ளன.