LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் ஆயுத படைகளின் புதிய தலைவர் நியமனம்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு

Share

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிராக நடந்த இந்த போரில், அந்நாட்டின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்கேற்ப, அந்நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. போர் தொடங்கிய பின்பு, உக்ரைனில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் ஆயுத படைகளின் புதிய தலைவராக ஆண்ட்ரி நேட்டோவ் என்பவரை அதிபர் ஜெலன்ஸ்கி நியமனம் செய்து உள்ளார்.