நியூசிலாந்து பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு
Share

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து உரையாடி உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து அவர்கள் பேசியுள்ளனர். இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி கூறியதாவது, “இன்று, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை புதுதில்லியில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நமது பகிர்ப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் நமது நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் ஒரு பயனுள்ள விவாதத்தை நடத்தினோம் என்று தெரிவித்தார். டில்லியில் நடக்கும் ரைசினா மாநாட்டுக்காக நியூசிலாந்து பிரதமர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.