LOADING

Type to search

இந்திய அரசியல்

எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லை – சுப.வீரபாண்டியன்

Share

தமிழ்நாட்டில் சாதி படுகொலை, ஆணவ படுகொலைகளை தூண்டி விடுபவர்கள் 2 பேர். ஒருவர் திருமாவளவன். இன்னொருவர் சுப.வீரபாண்டியன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக சுப.வீரபாண்டியன் கூறியதாவது: நாங்கள் பிறந்த பிறகு தான் மனுநீதி எழுதப்பட்டதா? அதற்கு முன்னால் மனுநீதி இல்லையா? மனு நீதியால் ஏற்பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஆணவ படுகொலைகளுக்கு காரணம். பிரிவினை என்பதே இந்து சமயத்தின் நியதியாக இருக்கிறது. பிரிவினை கூடாது, சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள்.

பிரிவினை வேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டிருப்பவர் எச்.ராஜா. அவர் எங்களை பார்த்து குற்றம்சாட்டுவதைவிட கேலிக்கூத்து வேறு ஒன்றும் இருக்க முடியாது. இப்படி பேசுவது கருத்து உரிமையில்லை. அவதூறு. எச்.ராஜா அநாகரிகமாக பேசி பேசி அரசியல் அரங்கில் இருந்து அழிந்து விட்டார்.  எச்.ராஜாவுக்கு மனநலம் சரியில்லையோ என எண்ண தோன்றுகிறது. அவர் நாகரீகமாக பேசினால் தான் ஆச்சரியம். இவ்வாறு அவர் கூறினார்.