LOADING

Type to search

இந்திய அரசியல்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரத போராட்டம்

Share

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் எழிலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் தொடக்க உரையாற்றினார். தலைமை செயலக சங்க ஒருங்கிணைப்பாளரான வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினரான விஜய குமரன், மாநில ஒருங்கிணைப்பாளரான சீனிவாசன் உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருகிற 30-ந்தேதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர்.