தமிழ்நாட்டின் சிங்கம் என விஜயகாந்தை அழைத்தார் – பிரேமலதா திடீர் புகழாரம்
Share

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரேமலதா கூறியதாவது: கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று. தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை அன்பாக அழைப்பார். விஜயகாந்த் உடல்நலக்குறைவோடு இருந்த போது அடிக்கடி தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.