LOADING

Type to search

இந்திய அரசியல்

அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? – ஜெயக்குமார் விளக்கம்

Share

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழகத்தில் வாழும் மலையாள மக்களுக்கும் விஷு பண்டிகை வாழ்த்துகள். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை. நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்; இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. பதவிக்காக யார் வாசல் கதவையும் தட்டியது கிடையாது; பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என் குடும்பம்; உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான். அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வழியில்தான் எங்களுடைய இயக்கம் பயணிக்கின்றது; அதில் நானும் தொடர்ந்து பயணிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.