LOADING

Type to search

சினிமா

பொன்னியின் செல்வன் வெளியீட்டு தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

Share

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன் படம் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திர பட்டாளங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

2 பாகங்களாக தாயராக உள்ள இப்படம் லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.தற்போது 2வது பாகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கதாபாத்திரங்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தபடத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டுள்ளன.