LOADING

Type to search

கனடா சமூகம்

FINDER ” திரைப்படத்திற்கான பூஜைகள் கனடா. தமிழகம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றன.

Share

கனடாவில் இயங்கிவரும் ‘ஆரபி புரடக்‌ஷன்ஸ்’அதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் வினோத் அவர்களும் இணைந்து தயாரிக்கும் FINDER ” திரைப்படத்திற்கான பூஜைகள் கனடா. தமிழகம் மற்றும் எமது தாயகமான யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றன.

இங்கே காணப்படும் படங்கள் கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது எடுக்கப்பட்டவையாகும். அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் சென்னை பிரசாத் ஸ்ரூடியோ ஆகியவற்றில் எடுக்கப்பெற்ற படங்களும் காணப்படுகின்றன.

FINDER ” திரைப்படத்திற்கான பதாகையை கனடா பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபர் ஜெயச்சந்திரன் மாஸ்டர் மற்றும் அவரது பாரியார் சத்தியா ஆகியோர் இணைந்து திரை நீக்கம் செய்துவைத்தனர்.

தொடர்ந்து ரஜீவ் சுப்பிரமணியம் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்க தாங்கள் திட்டமிட்ட விபரங்களை அங்கு கூடியிருந்த அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

பல துறைகளைச் சார்ந்த நண்பர்கள் மற்றும் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் என அங்கு கலந்து கொண்ட அனைவருக்கும் FINDER ” திரைப்படத்தின் இணைத் தயாரிப்பானர் ரஜீவ் சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்