LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த வழக்கில் 4 எதிரிகளுக்கு 3 வருட சிறைத்தண்டனை

Share

(கனகராஜா சரவணன்)

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தின் போது விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் 20ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

கடந்த 2015 ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதி குருநாகலில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பணித்த 66 இலட்சம் ரூபா பெறுமதியான வான் ஒன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது

இதையடுத்து விபத்துக்குள்ளான வானை தீயிட்டு எரித்தவர்களான சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை பிரதேசங்களைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார், வேலுப்பிள்ளை சுதர்சன், ஜெகநாதன் ஜெய சுதர்சன், சிவகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற பின்னர் 2016ம் ஆண்டு வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றில் கடந்த அக்டோபர் 30 ம்திகதி இனங்காணப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய 20ம் அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாணையைகளிஜன் போது வழக்கு தொடுநர் சார்பில்; அரச சட்டவாதிகளான தர்சிகா திருக்குமரநாதன், சதீஸ்காந் மோகன் ஆகியோர் தீர்ப்பு வழங்கும் போது ஆஜராகியிருந்த நிலையில் தண்டணைச் சட்டக்கோவை 32ம் பிரிவில் 418 பிரிவில் குற்றமான 66 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தான வானை சேதம் விளை வித்து தீ வைத்து எரித்த குற்றத்திற்கு 4 பேருக்கும் 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் தலா ஒருவர் 25 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

Previous Article