LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் TikTok நட்சத்திரம் என்று அழைக்கப்பெற்ற மேஹா தக்குர் வாகன விபத்தில் மரணத்தைத் தழுவினார்

Share

கனடாவில் TikTok நட்சத்திரம் என்று அழைக்கப்பெற்ற மேஹா தக்குர் வாகன விபத்தொன்றின் காரணமாக திடீரேன மரணத்தைத் தழுவினார் என அவரது குடும்பத்தினர் இணையத்தளங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளனர்

சில நாட்களுக்கு முன்னர் மேஹா தக்குர் அவர்களின் பெற்றோர் அல்லது சகோதரர்கள் பதிவிட்ட இன்ஸ்டகிராம் பதிவின் பிரகாரம் கனடாவின் பிராம்ப்டன் மாநகரில் வாழ்ந்து வந்த மக்கள் செல்வாக்குப் பெற்ற இந்த இளம் பெண் தனது 21 வயதில் மரணத்தை தழுவினார் என அறியப்படுகின்றது.

மறைந்த மேஹா தக்குர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளியிட்ட பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;_

“எங்கள் வாழ்க்கையில் ஒளியை வீசிக்கொண்டிருந்த எமது அன்பான மகளை இழந்து விட்டோம் என்ற சோகமான செய்தியை எமது கனத்த இதயங்களுடன் அவரை நேசித்த அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம், எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவும் , அக்கறையுள்ளவராகவும் இயற்கையான அழகுள்ளவருமான எமது புதல்வி , மேகா தாக்கூர், திடீரென்று எதிர்பாராத விதமாக நவம்பர் 24, 2022 அன்று அதிகாலையில் வாகன விபத்தொன்றில் சிக்கி காலமானார்,” என்றும் மேற்படிஇன்ஸ்டகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” மேஹா தக்குர் ஒரு தன்னம்பிக்கை மிக்க மற்றும் சுதந்திரமான போக்கு கொண்ட ஒரு இளம் பெண். அவரது இழப்பு எம்மை மட்டுமல்ல அவரை நேசித்த அனைவரையும் நன்கு பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். அவர் தனது ரசிகர்களை நேசித்தார், மேலும் அவர் திடீரென தான் இந்த உலகை விட்ட நீங்கிச் சென்றதை அனைவரும் அறிந்து கொள்ளவும் விரும்புவார். இந்த நேரத்தில், மேகாவுக்கு உங்கள் ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளையும் வழங்கும் வண்ணம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவளுடைய முன்னோக்கிய பயணத்தில்.”அவளுடன் இருக்கும். என்றும் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது

மேஹா தக்குர் அவர்களின் மரணம் தொடர்பாக நடிகை மரிகா சிலா என்பவர் தனது முக நூல் பதிவில் பின்வருமாறு அறிவித்துள்ளார்.

“ஆஹா, நான் பேசாமல் இருக்கிறேன். அவள் வாழ்க்கையில் அவளது நட்பைப் பெறுவதற்கு அதிர்ஷ்டசாலிகளாக விளங்கிய அனைவருக்கும் என் அனுதாபங்களும் உண்டு. . அவள் பெரிதும் தவறவிடப்படுவாள், ஒருபோதும் அவளை நேசித்த ஒவ்வொருவராலும் மறக்கப்படமாட்டாள். அவளுடைய ஒளிவீசும் பங்களிப்புக்கள் எனக்கும் இன்னும் என்னைப் போன்ற பலருக்கும் ஊக்கமளித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.