LOADING

Type to search

கனடா அரசியல்

கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இவ்வருடத்திற்கான வெற்றியாளர் விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

Share

கனடாவில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இவ்வருடத்திற்கான வெற்றியாளர் விருதுகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஹில்ரன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வழமை போல கனடாவின் மத்திய மாகாண மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களில் அரசியல் பதவிகளை வகிக்கும் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மண்டபம் நிறைந்த விழாவாக அமைந்த இந்த விருது வழங்கும் விழாவிற்கு கனடிய தமிழர் சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கும முக்கியமான பிரமுகர்கள் அழைக்கப்பெற்றவர்களாக அந்த பிரமாண்டமான மண்டபத்தை அலங்கரித்து அழகு செய்தார்கள்.

கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் திரு தேவதாஸ் தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் அரசியல் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றன.
இவ்வருடத்திற்குரிய விருதுகளைப் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களை கௌரவம் செய்தவர்கள் கூடு எமது தமிழர் சமூகத்தின் முக்கிய ‘தூண்களாக’ கருதப்படுகின்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்றைய விழாவில் முக்கிய நிகழ்வாக உரைகள் இடம்பபெற்றன. அத்துடன் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள் அங்கு மேடைக்கு அழைக்கப்பெற்று சபையோருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றனர்.

விருது பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு;_

1. Puvirajah Rajaradnam and Thavaraja Rajarathnam of Eraa Super Market – Best Entrepreneur Award.
2. Dr. Subashini Sivakumar of Van Luyk Greenhouses and Garden Centre – Best Women Entrepreneur Award.
3. Ajay Thavam of Pro-Life Wellness Centre – Best Young Entrepreneur Award.
4. Vithu Ramachandran of Ramachandran Law PC – Best Marketing Award,
5. Navajeevan Anantharaj of Puthiya Velichcham and eKuruvi – Community Services Award.