LOADING

Type to search

சினிமா

தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்து அதிரடி காட்டிய ஜோதிகா

Share

தமிழ் திரையுலகில் வாலி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. 1999 முதல் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் துருதுரு நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. முண்ணனி கதாநாயகியாக இருந்தபோதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் தியா, தேவ் என 2 குழந்தைகள். சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

குழந்தைகள் வளர்ந்த பின்னர் 36வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். கதாநாயகி சார்ந்த படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். அதன் மூலம் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.ஜோதிகா தற்போது காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர இந்தியிலும் ஜோதிகா இப்படத்தில் நடிப்பதாக உறுதியளித்துள்ளார். பிள்ளைகள் மும்பையில் படிப்பதால் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டனர்.

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிடும் ஜோதிகா, நேற்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஜோதிகா தலைகீழாக நின்று பயிற்சி பெறுவதை பார்த்து பல்வேறு இளம் நடிகைகள் ஆச்சர்யப்பட்டு வாவ் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். 44 வயதிலும் ஜோதிகா இப்படி உடற்பயிற்சி செய்வதற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)