LOADING

Type to search

சினிமா

உறுதியாய் சொன்ன அஜித்.. AK 62 படக்குழு எடுத்த முடிவு.. ரசிகர்களுக்கு தேடி வருது மகிழ்ச்சியான செய்தி

Share

அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது. அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு அடுத்ததாக அவர் விக்னேஷ் சிவன் இயக்கம் படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்திலிருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு மகிழ்திருமேனி அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமான. இது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், அதை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் 62 ஆவது படத்தின் தலைப்பை முதல் பார்வையுடன் வெளியிடுகின்றனர்.

நடிகர் அஜித் தற்போது தன்னுடைய உலக பைக் பயணத்திற்காக நேபாளில் உள்ளார். ஆனால் அவர் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு 62 ஆவது படத்தின் பதிவேற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதை படக்குழுவினருக்கு அறிவுறுத்திவிட்டார். இதனால் அஜித் 62 படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவர் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது. லைகா நிறுவனம் அந்த அறிவிப்பை வெளியிட உள்ளது.