லோகேஷ் இயக்கத்தில் ரஜினி
Share
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்து சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். நெல்சனின் முந்தைய படங்களைப் போல இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்திலும் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுவருவதாகவும் விரைவில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். இதற்கான படப்பிடிப்பு ரகசியமாக சென்னையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.













