LOADING

Type to search

சினிமா

தனுஷ் பட இயக்குநருடன் துல்கர் சல்மான்

Share

துல்கர் சல்மான் நடிப்பில் சீதா ராமம், சுப் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தனுஷ் பட இயக்குநருடன் துல்கர் சல்மான் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான், முன்னணி கதாநாயகன்களில் ஒருவராக வலம் வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் துல்கர் சல்மான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு துல்கர் நடிப்பில் தமிழில் ஹேய் சினாமிகா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதா ராமம், இந்தியில் சுப் ஆகிய படங்கள் வெளியாகின. இவைகளில் ஹேய் சினாமிகா தவிர மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தன.

முக்கியமாக தெலுங்கில் உருவாகி 4 மொழிகளில் வெளியான சீதா ராமம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல், சுப் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தற்போது கிங் ஆஃப் கோதா என்ற படத்தில் துல்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணையவுள்ளாராம்.