சென்னையின் பிரபல தியேட்டரை வாங்கிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா
Share
இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சில மாதங்களுக்கு முன் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர்.
இவர்கள் இருவரும் பல முக்கியமான தொழில்களில் தங்களுடைய முதலீடை செய்து வருகின்றனர். மேலும் தி ரௌடி பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்துவருகின்றனர். இந்த நிலையில் தற்போது சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றான அகஸ்தியாவை இவர்கள், தங்கள் நண்பர்களுடன் இணைந்து வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயபுரம் பகுதியில் இருக்கும் இந்த திரையரங்கை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் அந்த திரையரங்கை புதுப்பொலிவுடன் திறக்க விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வடசென்னை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய திரையரங்குகள் இல்லை என்பதால் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி அகஸ்தியா திரையரங்கை பல புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கின்றனர். நயன்தாரா ஏற்கனவே காஸ்மெட்டிக் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் தன்னுடைய முதலீடை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.













