LOADING

Type to search

சினிமா

ரஹ்மான், பாவனா இணையும் முதல் படம்

Share

ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘துருவங்கள் 16’ படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.