LOADING

Type to search

சினிமா

‘அழகோடு அறிவும் சேர்ந்தால்..’ மாமன்னன் விழாவில் கீர்த்தி சுரேஷ் குறித்து பேசிய கமல்ஹாசன்

Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மிஷ்கின், பாண்டியராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். ஆட்டம் பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன் நடிகை கீர்த்தி சுரேஷின் படத்தேர்வு குறித்து பேசினார். அதில், ” கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறார் என்று கூறினார்கள். அழகோடு அறிவும் சேர்ந்தால்தான் பேரழகு. இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததால் அது தெரிகிறது, அழகும் இருக்கிறது அறிவும் இருக்கிறது” என்றார். மேலும் படம் குறித்தும் சக நடிகர்கள் குறித்தும் பேசிய கமல், ”மாமன்னன் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பது என் ஆசை. இதில் கேட்கும் குரல் கேட்கப்பட வேண்டும். இது மாரி அரசியல் என்று சொன்னார். இது நம்ம அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். என்னை பொறுத்தவரையில் இது என்னுடைய அரசியலும்தான்.இந்தியா எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் தலைமுறையில் இருக்கிறோம். வடிவேலு இதில் மாமன்னனாக இருக்கிறார். தேவர் மகன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் என்னுடைய காட்சியையும் தாங்கிபிடித்தவர் வடிவேலு” என்றார்.