உரிமையை மீட்டெடுக்க வரும் சுந்தர் சி.. தலைநகரம்- 2 பதிவேற்றம்
Share
கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுந்தர் சி. இவர் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அஜித்தின் ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம்-2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘தலைநகரம்-2’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.













