LOADING

Type to search

இந்திய அரசியல்

‘அடிமை’ பழனிசாமி… ‘பாதம்தாங்கி’ பழனிசாமி.. ‘பம்மாத்து’ பழனிசாமி… இவரைப்போல் திமுகவை நினைக்கவேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்

Share

முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோ பேச்சில் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி அவர் பேசியிருப்பதாவது:

தமிழகத்தில் ‘அடிமை’ பழனிசாமி தலைமையில் அதிமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பாஜக ஆட்சி நடத்தி உள்ளது. ரெய்டு நடத்தினார்களே, எந்த வழக்கையாவது நடத்தினார்களா? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்களா? தண்டனை வாங்கித் தந்தார்களா? இல்லையே!

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிகையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்துகொண்டு இருக்கிறோம்.

இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா? அதிமுகவின் இந்த ஊழல் பெருச்சாளிகளைத்தான் டெல்லியில் மொத்தமாக சந்தித்தார், உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்தான் ஊழலுக்கு எதிராகத் தமிழகத்துக்கு வந்து முழங்கிவிட்டுப் போயிருக்கிறார்.

அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைத் தங்களின் கொத்தடிமைக் கூடாரமாக ஆக்குவதற்கு அமலாக்கத் துறையையும், சிபிஐயையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்தியது, பாஜக அவர்களும் பயந்துபோய் பாஜகவின் காலடியில் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட ‘பாதம்தாங்கி’ பழனிசாமி, செந்தில்பாலாஜியைப் பற்றி குறை சொல்கிறார்.

ஆனால், 2021 வரை அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். அப்போதெல்லாம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்கள்? இப்போது வாய்கிழியப் பேசுவோரை அப்போது எது தடுத்தது? 4 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை உறவினர்களுக்குக் கொடுத்ததாகப் புகார் எழுந்து, உயர் நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டவர்தான் பழனிசாமி. உடனடியாக உச்ச நீதிமன்றத்துக்குத் தடை வாங்க ஓடிய யோக்கிய சிகாமணிதான் இந்தப் ‘பம்மாத்து’ பழனிசாமி. அவருக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.