ஆதிபுருஷ் வெளியானதையொட்டி பிரபாஸ் ரசிகர்கள் மாட்டு வண்டிகளில் பேரணி
Share
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் வெளியான திரையரங்குகளில் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். தங்களின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், பிரபாசின் தீவிர ரசிகர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள யெம்மிகனூரில் மாட்டு வண்டி பேரணி நடத்தினர்.













