ஆளுநர் மாளிகையா அல்லது ஆர்எஸ்எஸ் அலுவலகமா? திருமாவளவன் கேள்வி
Share
அமைச்சரவை மாற்ற பரிந்துரையில்,ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்ற அய்யம் எழுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், “அமைச்சர் செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார் .
இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும். அமைச்சர்கள் யார் யார் ? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு.
இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற ஐயம் எழுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, இலாகா மாற்றத்துக்கு ஆளுநர் நேற்று மாலை திடீர் என ஒப்புதல் அளித்துள்ளார். செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.













