‘அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ‘- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Share
ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “நடிகர் விஜய் பேசிய நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என்றெல்லாம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது” என்று தெரிவித்தார்.













