மீண்டும் இளையராஜாவுடன் கைக்கோர்த்த ராமராஜன்
Share
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜன் ‘சாமானியன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ராகேஷ் இயக்குகிறார். இந்த படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் 7 ஆத்ரி பிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ராமராஜன் கதாநாயகனாக நடிக்கிறார்.
ராமராஜனின் 46-வது படமான இந்த படத்தை ‘சாமானியன்’ படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இயக்குவதோடு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் மூலம் கார்த்திக் குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘சாமானியன்’ படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் வி.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். ‘சாமானியன்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இளையராஜா இசையமைக்கிறார். அதன்பிறகு இந்த படத்தில் தலைப்பில், முதல் தோற்ற பதாகை, முன்னோட்டம் ஆகியவை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.













