LOADING

Type to search

இந்திய அரசியல்

600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் பரிசு

Share

தமிழத்திலேயே முதன்முறையாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கினார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு சென்னை – நீலாங்கரை பகுதியில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற து. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.

இதில் தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை விஜய் வழங்கினார். இதில் 12ஆம் வகுப்பில் 600/ 600 மதிப்பெண்கள் எடுத்த நந்தினிக்கு வைர நெக்லஸ் ஒன்றை விஜய் பரிசாக வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து 600/600 மதிப்பெண்களுடன் சாதனை படைத்திருந்தார்.