LOADING

Type to search

சினிமா

”விஜய் என் கருத்துடன் ஒத்துப்போகிறார்…” – கார்த்தி சிதம்பரம் சொன்ன விளக்கம்!

Share

நடிகர் விஜய் தன் கருத்துடன் ஒத்துப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், ஒரு தொகுதியில் ரூ.15 கோடி செலவு செய்தால் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள்? தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும். காசு வாங்காமல் ஓட்டுபோட வேண்டும் என பெற்றோரிடம் தெரிவியுங்கள் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியாது அவர் கூறிய அறிவுரை நல்ல அறிவுரை. பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும். நானும் அதையே கூறுகிறேன். காசு பணம் துட்டு மணி தான் தமிழ்நாட்டு அரசியல். தென்னக அரசியலையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அது இல்லாத அரசியல் நடக்க வேண்டும் என்பதை தான் நானும் கூறுகிறேன். அதையே தான் விஜய்யும் கூறியிருக்கிறார் என்றால் என் கருத்துடன் ஒத்துபோகிறார் என்றுதான் அர்த்தம் என இவ்வாறு கூறினார்.