LOADING

Type to search

சினிமா

சிகிச்சை பணமில்லாமல் தவிக்கும் நகைச்சுவை நடிகர் – பண உதவி செய்த விஜய் டிவி பாலா

Share

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பவா லட்சுமணனை கலக்கப்போவது யாரு பாலா சந்தித்து பண உதவி செய்துள்ளார்.

திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துவருபவர் பாவா லெட்சுமணன். குறிப்பாக வடிவேலு, விவேக் ஆகியோரது காமெடி காட்சிகளில் இவரை அதிகம் பார்க்க முடியும். மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் இடத்தில் அம்மா, மாயண்ணே வந்திருக்காக… மாப்ள மொக்கச்சாமி வந்திருக்காக… வாம்மா மின்னல் என இவர் பேசும் வசனம் மிக பிரபலம். சமீபகாலமாக பவா லெட்சுமணன் திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கபபடடு சிகிச்சைபெற்றுவருகிறார். அவரது கால் கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கிறது. பட வாய்ப்பில்லாததால் வருமானத்துக்கு வழியில்லாமல் தவிப்பதாகவும் திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் எனவும் பவா லெட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கலக்கப்போவது யாரு பாலா பவா லெட்சுமணனை சந்தித்து அவருக்கு ரூ.30, 000 பண உதவி வழங்கியுள்ளார்.