சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Share
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழகத்தில் பெய்து வரும் மழை தொடர்பாக சில தகவல்களை அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.













