LOADING

Type to search

சினிமா

“2026ல் தமிழக முதல்வரே” – மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி

Share

நடிகர் விஜய் 2026ல் தமிழக முதல்வராக வேண்டும் என அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மதுரையில் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி அடைந்தனர். இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகையை உணர்த்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டி, அதை சமூக வலைத்தளங்களில் பரப்பும் வேலைகளை மதுரை ரசிகர்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கிய விஜயின் செயல் அவரது அரசியல் வருகை சார்ந்த செயல்பாடாகவே கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது மதுரை ரசிகர்கள் நகர் பகுதிகளில் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் வகையில் ஆங்காங்கே பல்வேறு சுவரொட்டிகளை ஒட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “2026 தமிழக முதல்வரே! எங்கள் தலைமுறையை தலைநிமிர்த்திய தலைவனே!”; “நாளைய தமிழகம் காத்திருக்கிறது அண்ணா!” போன்ற வாசகங்களுடன் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.