பணிநீக்கம் குறித்து கோவை பெண் ஓட்டுநர் விளக்கம்
Share
தனியார் பேருந்தில் வேலை செய்யும் பெண் ஓட்டுநருடன் பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தநிலையில், தற்போது ஓட்டுநர் சர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றதால் பிரபலமாகியுள்ளார். இவரை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்திற்கே வந்து சந்தித்து வாழ்த்தி வருகின்றனர்.
கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநர் ஷர்மிளாவை வாழ்த்தினார். இத்தகைய சூழலில் ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள பேருந்தின் உரிமையாளர், தாங்கள் பணி நீக்கம் செய்யவில்லை என்றும் அவராகவே வேலை செய்ய விருப்பமில்லை என்று கூறி சென்றுவிட்டதாக தெரிவித்தார்.













