LOADING

Type to search

இந்திய அரசியல்

மோசடி வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் – ஜாமீனில் வெளியான கேரள காங்கிரஸ் தலைவர் உறுதி

Share

கேரளாவில் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வந்தவர் மோன்சன் மாவுங்கால். இவர் தங்கம் கடத்தல் மற்றும் பழமையான பொருட்கள் விற்பனையில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் மீது பாலியல் வழக்கும் இருந்தது. இந்த வழக்கில் மோன்சன் மாவுங்காலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மோன்சன் மாவுங்காலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், நான் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்பேன். நான் பயப்படவோ ஒளிந்து கொள்ளவோ போவதில்லை என்றார்.