LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் குளியலறையில் இளம் பெண் அடித்துக் கொலை; கணவன் கைது

Share

திருவனந்தபுரம் பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(வது 33). இவருடைய மனைவி வித்யா(30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த குடும்பத்தினர் கடந்த ஒரு மாதமாக திருவனந்தபுரம் மலையின் கீழ் குண்டமண்கடவு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பிரசாந்துக்கு குடிப்பழக்கமும், போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்தது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இது தொடர்பாக பலமுறை வித்யா போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் பிரசாந்தை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பலமுறை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22 ம் தேதி ( வியாழக்கிழமை) மாலை பிரசாந்தின் 2 குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். மூத்த மகன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய போது வித்யா குளியலறையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

இதையடுத்து கதறி அழுதபடி தன் வீட்டின் அருகே வசிக்கும் தாத்தா கோபமாருக்கு போன் செய்து நடந்த விபரத்தை கூறினான். இதன் பேரில் கோபகுமார் விரைந்து சென்று வித்யாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வித்யா இறந்து விட்டதாக கூறினார்.

வித்யாயாவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த கோபகுமார் மலையின் கீழ் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று வித்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரசாந்திடம் விசாரணை நடத்திய போது தன்னுடைய மனைவி குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக கூறினார். ஆனால், பிரேத பரிசோதனையில் வித்யாவின் வயிறு, தலை உள்பட பல பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக வித்யாவை அடித்து உதைத்து கொலை செய்ததாக பிரசாந்த் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.