அர்ஜுன் மகளை மணக்கிறார் தம்பி ராமையாவின் மகன் உமாபதி?
Share
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவர் அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இவரும் பட்டத்து யானை, சொல்லி விடவா போன்ற படங்களில் நடித்த நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் உமாபதியும் ஒருவர். அதன் பிறகுதான் அர்ஜுன் குடும்பத்திற்கும் தம்பி ராமையா குடும்பத்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டபோது, உமா பதியும், ஐஸ்வர்யாவும் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.













