லியோ திரைப்படம் விழிப்புணர்வு கதையாக இருக்கலாம்.. விஜய் வசந்த் கருத்து
Share
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் லியோ திரைப்படம், ஒரு விழிப்புணர்வு கதையாக கூட இருக்கலாம். திரைப்படங்களை கலை நயத்தோடு பார்க்க வேண்டும். படத்தை வெறும் படமாக மக்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.













